மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மை பாரதம் சிறப்பு இயக்கம் 5.0'-ன் கீழ், உயர் கல்வித் துறை 95% காகிதக் கோப்புகளையும் 87.5% மின்னணுக் கோப்புகளையும் ஆய்வு செய்தது

இடுகை இடப்பட்ட நாள்: 15 SEP 2026 7:20PM by PIB Chennai

மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை, தூய்மை பாரதம் 'சிறப்பு இயக்கம் 5.0'-ன் கீழ் 95.2% (2,04,859) காகிதக் கோப்புகளையும், 87.46% (62,564) மின்னணுக் கோப்புகளையும் ஆய்வு செய்தது. நாடு முழுவதும் சுமார் 1,159 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணிகளின் மூலம், நிலுவையில் உள்ள கோப்புகளைக் குறைப்பதிலும், 14,44,839 சதுர அடி அலுவலக இடத்தை விடுவிப்பதிலும், ஆவண நிர்வாகத்தை மேம்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டது. மேலும், தேவையற்ற பொருட்களை அகற்றியதன் மூலம் உயர்கல்வித் துறை ₹6.89 கோடி வருவாயை ஈட்டியது. இந்த இயக்கத்தின் கீழ் 3,312-க்கும் மேற்பட்ட கோப்புகள் டிஜிட்டல்மாயமாக்கப்பட்டன; 90,629 காகித/ மின்னணுக் கோப்புகள் அகற்றப்பட்டன.

அலுவலகங்கள் மற்றும் மத்திய நிதியுதவி பெறும் உயர்கல்வி நிறுவனங்களில் நிலுவையில் உள்ள விவகாரங்களைக் குறைத்தல், அரசு அலுவலகங்களின் தூய்மையை மேம்படுத்துதல், ஒட்டுமொத்த பணிச்சூழலைச் சீரமைத்தல் ஆகியவற்றின் மூலம், தன்னாட்சி அமைப்புகள் உட்பட அனைத்து அலுவலகங்களிலும் தூய்மையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் 2026  அக்டோபர் 2 முதல் 31, வரை நடைபெறவுள்ள 'சிறப்பு இயக்கம் 6.0'-ல் தீவிரமாகப் பங்கேற்க உயர்கல்வித் துறை ஆயத்தமாக உள்ளது.

இந்த இயக்கம் இரண்டு கட்டங்களாக நடைபெறும்- 2026 செப்டம்பர் 15 முதல் 30 வரை தயாரிப்புப் பணிகளும், அதைத் தொடர்ந்து 2026 அக்டோபர் 2 முதல் 31 வரை அமலாக்க செயல்பாடுகளும் மேற்கொள்ளப்படும்.

நிலுவையிலுள்ள விவகாரங்களை முடித்து வைப்பதற்காக, நவம்பர் 2025 முதல் ஆகஸ்ட் 2026 வரை நடத்தப்பட்ட சிறப்பு முகாமின் ஒரு பகுதியாக, 24,126 பொதுமக்கள் குறைகள், 4,177 குறைதீர்ப்பு மேல்முறையீடுகள் உட்பட, பொதுமக்களுடனான தொடர்பு சார்ந்த கணிசமான எண்ணிக்கையிலான விவகாரங்கள் தீர்த்து வைக்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2310611&reg=3&lang=1

***

TV/RB/SM


(வெளியீட்டு அடையாள எண்: 2313345) வருகையாளர் எண்ணிக்கை : 19
இந்த வெளியீட்டை படிக்க: Marathi , English , Urdu , हिन्दी , Punjabi