தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

ராஜஸ்தானில் பெண்ணை தாக்கி அவமதித்த சம்பவம்: மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை

இடுகை இடப்பட்ட நாள்: 15 SEP 2026 7:34PM by PIB Chennai

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் கணவர் மற்றும் உறவினர்கள் பெண்ணை தாக்கி, தலைமுடியை வலுக்கட்டாயமாக வெட்டி, அரை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் சென்றதாக வெளியான செய்தியை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெற்ற  இந்த சம்பவத்தின் காணொலி சமூக வலைதளங்களில் வெளியானது. செய்தி உண்மையாக இருந்தால், பெண்ணின் வாழ்வுரிமை மற்றும் கண்ணியத்துக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ராஜஸ்தான் தலைமைச் செயலாளர் மற்றும் பன்ஸ்வாரா காவல் கண்காணிப்பாளருக்கு  விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பி, விசாரணை நிலை மற்றும் வழங்கப்பட்ட இழப்பீடு குறித்த விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் அளிக்க ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2310618&reg=3&lang=1

***

TV/VK/SM


(வெளியீட்டு அடையாள எண்: 2313341) வருகையாளர் எண்ணிக்கை : 20
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu