சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் மத்திய அரசு: மத்திய இணையமைச்சர் திரு பி,எல் வர்மா

இடுகை இடப்பட்ட நாள்: 18 SEP 2026 2:08PM by PIB Chennai

விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரமளிக்கும் அரசாக மத்திய அரசு உள்ளதாக மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் திரு பி எல் வர்மா தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரேதசம் மாநிலம் புதெளனில் நடைபெற்ற “தூய்மையே சேவை” இயக்க நிகழ்ச்சியில் மத்திய சமூக நீதித் துறை அமைச்சர் திரு பி எல் வர்மா கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு பி எல் வர்மா, தூய்மை பணியாளர்களின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களை சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மேம்படுத்த வழிவகை செய்யப்படும் என்றார்.

ஒவ்வொரு குடிமகனும் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் பங்களிக்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக, விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு ஆட்டோ ரிக்‌ஷா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் திரு பி எல் வர்மா வழங்கினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2311937&reg=3&lang=1

***

TV/ AC /SM


(வெளியீட்டு அடையாள எண்: 2313330) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , हिन्दी , Gujarati