புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய புள்ளியில், திட்ட அமலாக்க அமைச்சகத்தின் சிறப்பு பிரசாரம் 6.O துவக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 18 SEP 2026 12:33PM by PIB Chennai

மத்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் நடப்பாண்டு மேற்கொள்ள உள்ள சிறப்புப் பிரசாரம் 6.O திட்டத்திற்கான முன்னேற்பாடு மற்றும் தயாரிப்புப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

கடந்த 2021-ம் ஆண்டு முதல் மத்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அலுவலகங்களில் நிலுவையில் உள்ள முறையீடுகள், கோரிக்கைகள் உள்ளிடவை சிறப்பு பிரசாரம் மூலம் தீர்க்கப்பட்டு வருகிறது.

அதன்படி நடப்பாண்டு சிறப்புப் பிரசாரம் 6.O திட்டம் அக்டோபர் 2ஆம் தேதி முதல் 31-ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றன.

இந்த பிரசாரத்தின் மூலம் கள அலுவலகங்கள் முழுவதும் உள்ள மின்னணுக் கழிவுகளை திறம்பட சேகரித்து, தரம் பிரித்து, அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

மொத்தம் இரண்டு கட்டங்களாக திட்டமிடப்பட்டுள்ள இந்த பணிகளில் முதல் கட்டம் தொடங்கப்பட்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அதைத் தொடர்ந்து, அக்டோபர் 2-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை பிரதமர் அலுவலகம், முக்கியப் பிரமுகர்கள், மாநில அரசுகள் மற்றும் நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள குறிப்புகள் மற்றும் தேவையற்ற மனு அல்லது முறையீடு போன்றவற்றை கண்டறிந்து தரம் பிரித்து அப்புறப்படுத்தும் செயலாக்க பணிகள் நடைபெறுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2311871&reg=3&lang=1

***

TV/AC/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2313195) வருகையாளர் எண்ணிக்கை : 20
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी