சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
அதிவேக தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகம்: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
21 SEP 2026 4:43PM by PIB Chennai
வளர்ச்சியடைந்த பாரதம் தொலைநோக்கு திட்டத்தின்கீழ் தேசிய நெடுஞ்சாலைகளை உலகத்தரத்துக்கு உயர்த்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. அந்தவகையில், அதிவேக நெடுஞ்சாலைகளில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது, சாலை பாதுகாப்பை பலப்படுத்துவது, தேசிய நெடுஞ்சாலைகளை இணைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. விரைவுச் சாலை, தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளுக்கு தனித்தனியாக இல்லாமல் பொதுவான வகையில், தொழில்நுட்பம், பாதுகாப்பு அம்சங்கள் இந்த புதிய விதிமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது.
சுமார் 15 ஆயிரம் வாகனங்கள் செல்லும் 4 வழித்தட சாலை 60 மீட்டர் அகலத்தில் அமைக்கவும், 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வாகனங்கள் வரை செல்லும் நான்கு மற்றும் 6 வழித்தட சாலைகளை 70 மீட்டர் அகலத்திற்கு அமைக்கவும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.
விரைவுச் சாலை, தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை ஆகிய சாலைகளை இணைக்கும் வகையில், சந்திப்பு அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள், விமான நிலையங்கள், தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகள், சுற்றுலா இடங்கள் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சாலைகள் மேம்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலை பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை தடுக்கும் பொருட்டும் சுற்றித்திரியும் கால்நடைகள் சாலை பகுதிக்குள் வராமல் தடுக்கும் வகையில், சாலை ஓரத்தில் ஒரு மீட்டர் உயரத்துக்கு சுவர் அமைப்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளையும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வகுத்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313032®=3&lang=1
***
TV/LN/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2313174)
வருகையாளர் எண்ணிக்கை : 8