சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நோயாளிகள் தர உத்தரவாதம் கொண்ட மருந்தைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – மத்திய இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல்
இடுகை இடப்பட்ட நாள்:
21 SEP 2026 2:13PM by PIB Chennai
இந்திய மருந்தியல் ஆணையம் புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் ஏற்பாடு செய்திருந்த 6-வது தேசிய மருந்துக் கண்காணிப்பு வார நிகழ்ச்சியில், மத்திய சுகாதாரம், குடும்பநலன், ரசாயனம், உரங்கள் துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் கலந்து கொண்டார். அப்போது இந்தியத் தேசிய மருந்துக் குறிப்பேட்டின் 7-வது பதிப்பு, மருத்துவக் கருவிகள் தொடர்புடைய பாதகமான நிகழ்வுகளைக் கண்காணித்து தகவல் அளிப்பதற்கான இந்திய மருத்துவமனைகளுக்கான வழிகாட்டுதல் ஆவணம், ஐஒஎஸ் பயனர்களுக்கான ஏடிஆர்-பிவிபிஐ 2.0 மொபைல் செயலி ஆகியவற்றைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மருந்துப் பாதுகாப்பு, நோயாளி பராமரிப்பை வலுப்படுத்த பணியாற்றும் உயர் அரசு அதிகாரிகள் ஒழுங்குமுறை ஆணையர்கள், சுகாதார நிபுணர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய திருமதி அனுப்பிரியா படேல், மருந்துகளை உரிய முறையில் பயன்படுத்துவதும் தொடர்ச்சியான பாதுகாப்பு சார்ந்த கண்காணிப்பும், பொது சுகாதாரத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்று குறிப்பிட்டார். ஒவ்வொரு நோயாளியும் தர உத்தரவாதம் கொண்ட மருந்தை, உரிய முறையில் அதிக பாதுகாப்புடன் பெற வேண்டுமென்று தெரிவித்தார்.
மருந்து கண்காணிப்புத் துறையில் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து சுட்டிக்காட்டிய அமைச்சர், நாடு முழுவதிலுமிருந்து மருந்து பாதுகாப்புத் தரவுகளை உருவாக்கவும், சேகரிக்கவும், செயல்படுத்தவும், பகுப்பாய்வு செய்யவும் கூடிய உள்நாட்டு சூழலை இந்தியா உருவாக்கியுள்ளதாகக் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2312930®=3&lang=1
***
SS/IR/PS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2313128)
வருகையாளர் எண்ணிக்கை : 10