பிரதமர் அலுவலகம்
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள உலக நாடுகளின் தலைவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
17 SEP 2026 10:51PM by PIB Chennai
இன்று தனது பிறந்த தினத்தையொட்டி வாழ்த்துத் தெரிவித்துள்ள உலக நாடுகளின் தலைவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி,நன்றி தெரிவித்துக் கொண்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி பதிவிட்டுள்ளதாவது:
டொமினிக் குடியரசிற்கும், அந்நாட்டு மக்களின் நல்வாழ்த்துகளுக்கும், பிரதமர் திரு ஸ்கெரிட் அவர்களின் அன்பான வாழ்த்துகளுக்கும் நன்றி. இந்தியா நமது நெருங்கிய நட்புறவின் மீது மிகுந்த மதிப்பு கொண்டுள்ளது .
அன்பான வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் திருமதி மெலோனி அவர்களுக்கு நன்றி. இந்தியா-இத்தாலி இடையேயான சிறப்பு உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த, நமது நெருங்கிய ஒத்துழைப்பைத் தொடர ஆவலுடன் காத்திருக்கிறேன்.
பிரதமர் திரு டோப்கே அவர்களே, உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கும் கனிவான வார்த்தைகளுக்கும் நன்றி. உங்கள் வாழ்த்துகளையும், உணர்வுகளையும் நான் மிகவும் மதிக்கிறேன்.
பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற உச்சிமாநாட்டின் போது, உங்களைச் சந்தித்ததும், உலகளவிலான சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நமது ஒருங்கிணைந்த அர்ப்பணிப்பு மிக்க நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கியது மகிழ்ச்சியளித்தது.
டாக்டர் டெட்ரோஸ் அவர்களே, உங்கள் அன்பான பிறந்தநாள் வாழ்த்துகளுக்கும், கனிவான வார்த்தைகளுக்கும் நன்றி.
அன்பான வாழ்த்துகளுக்கு பிரதமர் திரு தாரிக் ரஹ்மான் அவர்களுக்கு நன்றி. உங்கள் கனிவான வார்த்தைகளை நான் மிகவும் பாராட்டுகிறேன்.
-----
(Release ID: 2311738)
TV/SV/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2313122)
வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam