புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் தூய எரிசக்திக்கான இலக்கை அடைவதில், சோலார் எனர்ஜி நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்கிறது: மத்திய அமைச்சர் திரு ஸ்ரீபத் யஸ்ஸோ நாயக்

இடுகை இடப்பட்ட நாள்: 21 SEP 2026 2:14PM by PIB Chennai

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில், உலகின் முன்னணி நாடாக இந்தியாவை உருவெடுக்கச் செய்யும் வகையில், சோலார் எனர்ஜி நிறுவனத்தின், 15 ஆண்டுகால செயல்பாடுகள் ஒரு சான்றாகத் திகழ்கிறது என்று புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் யஸ்ஸோ நாயக் கூறினார்.

இந்த நிறுவனத்தின் 15-வது நிறுவன தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில், இன்று, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார்.

நாட்டின் தூய எரிசக்திக்கான இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதில், இந்த நிறுவனம்  தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அதனை நிறைவேற்றுவதில் இந்த நிறுவனம் தொடர்ந்து முக்கியப் பங்காற்றும் என்ற நம்பிக்கை தெரிவித்தார்.

மத்திய மின்சார ஆணையத்தின்  தலைவர் திரு கன்ஷ்யாம் பிரசாத், புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு மயங்க் திவாரி, ஐநாக்ஸ் ஜிஎப்எல் குழுமத்தின் தலைவர் திரு விவேக் ஜெயின், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையைச் சேர்ந்த பிற மூத்த அதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2312929&reg=3&lang=1   

-----

TV/SV/SM 


(வெளியீட்டு அடையாள எண்: 2313053) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati