PIB Backgrounder
azadi ka amrit mahotsav

மக்கள் இயக்கமாக மாறிய தூய்மை இந்தியா திட்டம் கிராமப்புற சுகாதாரத்தை மாற்றி அமைக்கின்றன

இடுகை இடப்பட்ட நாள்: 20 SEP 2026 12:04PM by PIB Chennai

பல ஆண்டுகளாக, கிராமப்புற சுகாதாரம் நாடு தழுவிய அளவில் ஒரு தொடர்ச்சியான வளர்ச்சிக்கான அக்கறையாக இருந்து வந்தது. 2014-ல் தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கியபோது, கிராமப்புற கழிப்பறை சுகாதார வசதி 39 சதவீதமாக இருந்தது. 2019-க்குள், அது 100 சதவீதத்தை அடைந்தது . 2014 - 2019-க்கு இடையில் 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 10.28 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டன. அதைத் தொடர்ந்து, 2019- ல் கிராமப்புற இந்தியா முழுவதும் திறந்தவெளி மலம் கழித்தல் அற்ற பகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்தச் சாதனை இந்தியாவின் சுகாதாரச் சூழலின் தன்மையையே மாற்றியமைத்தது. வீட்டுக் கழிப்பறை வசதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலிருந்து, கிராம அளவில் சுகாதார நடைமுறைகளின் நிலைத்தன்மை, கழிவு மேலாண்மை ஆகியவை குறித்த பரந்த அக்கறைக்கு கவனம் மாறியது. இதுவே இரண்டாம் கட்ட தூய்மை இந்தியா இயக்கத்தின் மையக் கவனமாக அமைந்தது. இது திறந்தவெளி மலம் கழித்தல் அற்ற நிலையைத் தக்கவைப்பதிலும் , திடக்கழிவு, திரவக் கழிவு மேலாண்மை அமைப்புகளை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது . இந்தக் கவனத்தின் தாக்கம் இப்போது இந்தியாவின் கிராமங்களில் தெரிகிறது.

17 செப்டம்பர் 2026 நிலவரப்படி, இந்தியாவில் 5.69 லட்சம் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத ஓடிஎஃப் பிளஸ் கிராமங்கள் உள்ளன. அவற்றில் 5.25 லட்சம் கிராமங்கள் 'ஓடிஎஃப் பிளஸ்' மாதிரி அந்தஸ்தைப் பெற்றுள்ளன. மேலும், 5.38 லட்சம் கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மை ஏற்பாடுகளும், 5.65 லட்சம் கிராமங்களில் திரவக் கழிவு மேலாண்மை அமைப்புகளும் நிறுவப்பட்டுள்ளன. 582 மாவட்டங்களில் தற்போது 1,314 கோபர்தன் உயிரி எரிவாயு ஆலைகள் செயல்பாட்டில் உள்ளன. வீடுகள் நிலையில், 12.22 கோடி தனிநபர் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

தூய்மை இந்தியா இயக்கத்தின் பலன்கள், உருவாக்கப்படும் உள்கட்டமைப்பில் மட்டும் அடங்கி இருப்பது அல்ல. தூய்மை என்பது மக்களாலும் சமூகங்களாலும் பேணப்படும் ஒரு அன்றாடப் பழக்கமாக மாறுவதிலும் அடங்கியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2312635&reg=48&lang=1

****

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2312772) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Bengali , Gujarati