குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, நாளை முதல் முதல் 23-ம் தேதி வரை குஜராத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
20 SEP 2026 6:01PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்கள் நாளை (2026 செப்டம்பர் 21) முதல் 23-ம் தேதி வரை குஜராத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார்.
செப்டம்பர் 22 அன்று, கெவாடியாவில் உள்ள ஏக்தா நகரில் நடைபெறும் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் கலந்துகொள்கிறார்.
செப்டம்பர் 23 அன்று, வதோதராவில் உள்ள பரோடா மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் 75-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்துகொள்கிறார். அதே நாளில், அவர் பிரம்ம குமாரிகளின் 'உலகப் புதுப்பித்தலுக்கான ஆன்மீக விழிப்புணர்வு' என்ற பிரச்சார இயக்கத்தைத் தொடங்கி வைக்கிறார். அத்துடன் வதோதராவில் தியான மையத்தைத் திறந்து வைக்கிறார். மேலும், இந்நிகழ்வில் பிரம்ம குமாரிகள் அமைப்பின் 'வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான இளைஞர்கள்: தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான உள்ளார்ந்த வலிமையை எழுப்புதல்' என்ற இயக்கத்தையும் அவர் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைக்கிறார்.
***
(Release ID: 2312723)
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2312748)
வருகையாளர் எண்ணிக்கை : 15