பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இந்தியக் குழுவினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 19 SEP 2026 7:28PM by PIB Chennai

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இந்தியக் குழுவினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒவ்வொரு விளையாட்டு வீரரும் அபாரமாக உழைத்துள்ளனர் என்றும், ஒட்டுமொத்த தேசமும் அவர்களை நினைத்துப் பெருமை கொள்கிறது என்றும் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"ஐச்சி-நகோயாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கும் வேளையில், இந்தியக் குழுவினருக்கு எனது நல்வாழ்த்துகள். ஒவ்வொரு விளையாட்டு வீரரும் அபாரமான கடின உழைப்பையும், குறிப்பிடத்தக்க அர்ப்பணிப்பையும், உறுதியையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியா அவர்களை நினைத்துப் பெருமை கொள்கிறது.

அவர்கள் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தட்டும்!"

****

(Release ID: 2312524)

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2312566) வருகையாளர் எண்ணிக்கை : 20