நிதி அமைச்சகம்
சொத்து பணமாக்கல் திட்டத்தின் கீழ், ரூ.5,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள சொத்துகளைப் பணமாக்குவதற்கான முன்மொழிவுகளை தேசிய நிலப் பணமாக்கல் கழகம் பரிந்துரைத்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
19 SEP 2026 10:54AM by PIB Chennai
சொத்து பணமாக்கல் திட்டத்தின் கீழ், ரூ.5,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள சொத்துகளைப் பணமாக்குவதற்கான முன்மொழிவுகளை பரிசீலித்து, தேசிய நிலப் பணமாக்கல் கழகம் பரிந்துரை செய்துள்ளது.
தேசிய நிலப் பணமாக்கல் கழகத்தின் 21-வது இயக்குநர்கள் குழு கூட்டம், 2026 செப்டம்பர் 18 அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தற்போதைய சொத்து பணமாக்கல் திட்டம், நிதிச் செயல்பாடு, முக்கிய நிறுவன அளவிலான முன்முயற்சிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.
பணமாக்கல் நடவடிக்கைக்காக அடையாளம் காணப்பட்ட உபரி நிலம், கட்டிடச் சொத்துகளை உள்ளடக்கிய இந்த முன்மொழிவுகள், முழுமையாகப் பயன்படுத்தப்படாத, உபரி சொத்துகளின் மதிப்பை மீட்டெடுக்கும் அரசின் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் ஒரு முக்கிய நடவடிக்கையாக அமைகிறது.
மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், பிற அரசு அமைப்புகளின் உபரி சொத்துகளைப் பணமாக்குவதை எளிதாக்குவதில், தேசிய நிலப் பணமாக்குதல் கழகம் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து வாரியம் ஆய்வு செய்தது. வெளிப்படைத்தன்மை, செயல்திறன், மதிப்பு மீட்பு போன்ற செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து, பொருத்தமான சொத்துகளை அடையாளம் காணுதல், தேவையான விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளுதல், மதிப்பீட்டுப் பணிகளை எளிதாக்குதல், முறையான பணமாக்கல் செயல்முறைகளை வடிவமைத்தல் ஆகியவற்றில் சொத்துகளைக் கொண்ட அமைப்புகளுடன் இணைந்து இக்கழகம் பணியாற்றி வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2312325®=3&lang=1
****
SS/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2312484)
வருகையாளர் எண்ணிக்கை : 11