குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
செப்டம்பர் 18 அன்று, குடியரசுத் துணைத்தலைவர் மகாராஷ்டிராவிற்கு பயணம் மேற்கொள்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
17 SEP 2026 4:48PM by PIB Chennai
குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் 2026 செப்டம்பர் 18 அன்று மகாராஷ்டிராவின் மும்பை, லோனாவாலா, புனே ஆகிய நகரங்களுக்குப் பயணம் மேற்கொள்வார்.
செப்டம்பர் 18 அன்று, காலையில், மும்பையின் லால்பாக்சா ராஜா விநாயகரை அவர் வழிபாடு செய்வார்.
கைவல்யதாமாவில் உள்ள கோர்தன்தாஸ் சேக்சாரியா யோகா மற்றும் கலாச்சார ஒருங்கிணைப்புக் கல்லூரியின் பவள விழா கொண்டாட்டங்களில் பங்கேற்க, மதியம், குடியரசுத் துணைத்தலைவர் லோனாவாலாவிற்குச் செல்வார்.
மாலை, புனேவில் உள்ள நேரு மைதானத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கணேஷ் கலா கிரீடா ரங்மஞ்சில் நடைபெறும் 38-வது புனே திருவிழாவில் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் கலந்துகொள்வார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2311424®=3&lang=1
***
TV/BR/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2312197)
வருகையாளர் எண்ணிக்கை : 4