பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்திய அஞ்சல் துறை நவீன, தொழில்நுட்பம் சார்ந்த, தொழில்முறை ரீதியாக நிர்வகிக்கப்படும் ஒரு நிறுவனமாக உருவெடுத்துள்ளதை எடுத்துரைக்கும் கட்டுரையைப் பிரதமர் பகிர்வு

இடுகை இடப்பட்ட நாள்: 17 SEP 2026 5:38PM by PIB Chennai

இந்திய அஞ்சல் துறை நவீன, தொழில்நுட்பம் சார்ந்த, தொழில்முறை ரீதியாக நிர்வகிக்கப்படும் ஒரு நிறுவனமாக உருவெடுத்துள்ளதை சிறப்பித்து, மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா எழுதிய கட்டுரை ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார். சரக்குப் போக்குவரத்து, நிதிச் சேவைகள், குடிமக்கள் சார்ந்த சேவைகள் ஆகியவற்றில் டிஜிட்டல் திறன்களுடன் தனது பரந்த சேவை வலையமைப்பையும் இந்திய அஞ்சல் துறை ஒருங்கிணைத்து வருவதாக அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:

“நவீன, தொழில்நுட்பம் சார்ந்த, தொழில்முறை ரீதியாக நிர்வகிக்கப்படும் ஒரு நிறுவனமாக இந்திய அஞ்சல் துறை அடைந்துள்ள மாற்றத்தை திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா @JM_Scindia இந்தக் கட்டுரையில் எடுத்துரைக்கிறார். சரக்குப் போக்குவரத்து, நிதிச் சேவைகள், குடிமக்கள் சார்ந்த சேவைகள் ஆகியவற்றில் டிஜிட்டல் திறன்களுடன் தனது பரந்த சேவை வலையமைப்பையும் இந்திய அஞ்சல் துறை ஒருங்கிணைத்து வருவதை அவர் குறிப்பிடுகிறார். அதே வேளையில், 'அஞ்சல் சேவை, மக்கள் சேவை’ என்ற உணர்வுடன், நம்பகமான பொதுச் சேவை நிறுவனமாகத் தனது பங்கை அது தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது.”

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2311499&reg=3&lang=1 

***

TV/BR/SM


(வெளியீட்டு அடையாள எண்: 2312195) வருகையாளர் எண்ணிக்கை : 6