பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியக் கடற்படைக்கான அதிநவீனப் போர்க்கப்பல் கட்டுமான பணிப் துவக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
18 SEP 2026 10:41AM by PIB Chennai
அதிநவீன ஏவுகனைப் போர்க்கப்பல் திட்டத்தின் 2-வது கப்பல் கட்டுமானத்திற்கான பணி கொச்சி கப்பல் கட்டுமானத் தளத்தில் செப்டம்பர் 17 அன்று தொடங்கப்பட்டது.
இந்தியக் கடற்படையை வலிமைப்படுத்தும் நோக்கில் நவீன போர் ஆயுதங்களுடன் கூடிய 6 அதிநவீனப் போர்க்கப்பல்கள் கட்டுவதற்காக கொச்சி கப்பல் கட்டுமான தள நிர்வாகத்துடன் கடந்த 2023-ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தின் கீழ் 2-வது கப்பல் கட்டுமான பணிகள் கொச்சி கப்பல் கட்டுமான தளத்தில் 2026 செப்டம்பர் 17 அன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை போர்க்கப்பல் உற்பத்தி மற்றும் கொள்முதல் குழு துணைக் கட்டுப்பட்டு அதிகாரியான ரியர் அட்மிரல் கபில் மேத்தா தொடங்கி வைத்தார்.
விழாவில் இந்தியக் கடற்படை, கொச்சி கப்பல் கட்டுமானத் தளத்தின் உயர்நிலை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எதிர்காலத்தில் ஏற்படும் போர்ச் சூழலுக்கு ஏற்ப இந்தியப் போர்க் கப்பல்களைத் தயார்படுத்தும் வகையில், போர்க் கப்பலில் அடுத்தத் தலைமுறைக்கான அதிநவீன ஆயுதங்கள், சென்சார்கள் பொருத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் சிக்கலான கடல்சார் சூழலில் செயல்படக்கூடிய வகையில் வலிமையான, நவீன கடற்படையை உருவாக்கும் விதமாக மேக் இன் இந்தியா திட்டத்தில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2311806®=3&lang=1
***
SS/ AC /SM
(வெளியீட்டு அடையாள எண்: 2312004)
வருகையாளர் எண்ணிக்கை : 8