சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
உலக நோயாளிகள் பாதுகாப்பு தினத்தை கொண்டாடிய மத்திய சுகாதார அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
18 SEP 2026 8:07AM by PIB Chennai
உலக நோயாளிகள் தினத்தைக் கடைப்பிடிக்கும் வகையில், தொற்றில்லா நோய்களிலிருந்து பாதுகாப்பைப் பேண, மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. புதுதில்லியில் சுகாதாரத்துறை சார்பில் உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் 2026 கொண்டாடப்பட்டது. இது தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய தேசிய நல்வாழ்வு குழும இயக்குநர் ஆராதனா பட்நாயக், நோயாளிகள் பாதுகாப்புக்கு உறுதி தருவதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்ட அணுகுமுறை தேவை என்றும் தொற்றில்லா நோயில் அதிகரித்து வரும் சுமையை எதிர்கொள்ள நோயாளிகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவது அவசியம் என்றும் கூறினார்.. நாடு முழுவதும் பாதுகாப்பான சுகாதார அமைப்புகளை கட்டமைப்பதில் மத்திய அரசு அர்ப்பணிப்போடு செயல்படுகிறது. தொற்றா நோய்களின் தடுப்பு,நோய் கண்டறிதல், சிகிச்சையில் ஒட்டுமொத்த சுகாதார அமைப்புகளும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும், இந்தியாவில் ஏற்படும் மரணங்களில் 63 சதவிகிதம் தொற்றில்லா நோயினாலே ஏற்படுகிறது என்றும் கூறினார். 2027 மார்ச் மாதத்துக்குள் அனைத்து துணை சுகாதார நிலையங்களுக்கு தேசிய தர உறுதிச் சான்றிதழ் வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க மாநிலங்களைக் கேட்டுக் கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2311769®=3&lang=1
***
SS/MM/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2311984)
வருகையாளர் எண்ணிக்கை : 7