நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
தொழில் நிறுவனங்கள், ஆய்வகங்கள் சட்டபூர்வ அறிவியல் சோதனை மையங்களாகச் செயல்பட விண்ணப்பிக்கலாம்
இடுகை இடப்பட்ட நாள்:
15 SEP 2026 5:21PM by PIB Chennai
மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை, அரசால் அங்கீகரிக்கப்பட்ட சோதனை மையங்களின் கட்டமைப்பை விரிவுபடுத்துவதன் மூலம், நாட்டின் சட்ட அளவியல் சரிபார்ப்பு உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தி வருகிறது.
சோதனை மையம் அமைப்பதற்கான அங்கீகாரம் பெறுவதற்கான, புதிய விண்ணப்பங்களுக்கு நாடு முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்கள், ஆய்வகங்கள், தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.
சட்ட அளவியல் (அரசு அங்கீகரிக்கப்பட்ட சோதனை மையம்) விதிகள், 2013'-ல் மேற்கொள்ளப்பட்டத் திருத்தங்களைத் தொடர்ந்து, இவற்றின் செயல்பாட்டு வரம்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சுகாதாரம், எரிசக்தி, போக்குவரத்து, சில்லறை வர்த்தகம், உற்பத்தி, உள்கட்டமைப்பு, வளர்ந்து வரும் தூய எரிசக்தித் துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 23 வகையான எடை மற்றும் அளவீட்டு உபகரணங்கள் இச்சோதனை வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
தகுதிவாய்ந்த தொழில் நிறுவனங்கள், ஆய்வகங்கள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள், தொழிற்பயிற்சி நிலையங்கள், சோதனை வசதி மையங்கள் ஆகியவை அரசால் அங்கீகரிக்கப்பட்ட சோதனை மையங்களாக செயல்படுவதற்கான அங்கீகாரம் பெற இத்துறை தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது. இந்தத் துறையின் இணையதளம் வாயிலாக மீண்டும் விண்ணப்பங்கள் கோரப்பட்ட நிலையில், ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கேகாணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2310523®=3&lang=1
***
TV/SV/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2311590)
வருகையாளர் எண்ணிக்கை : 7