இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நகரங்களில் கழிவு மேலாண்மையைச் சீரமைப்பது குறித்த கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 17 SEP 2026 9:44AM by PIB Chennai

இந்தியாவில் திடக்கழிவு மேலாண்மைத் தொழில்நுட்பங்களுக்கான வாழ்க்கை சுழற்சி மதிப்பீட்டுக் கட்டமைப்பை உருவாக்குதல் என்ற திட்டத்தின் முடிவுகள், பரிந்துரைகளை ஆய்வு செய்வதற்கான கூட்டம் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட் தலைமையில் 2026 செப்டம்பர் 16 அன்று நடைபெற்றது. இதில், அறிவியல் துறைச் செயலாளர் டாக்டர் பர்விந்தர் மைனி, சென்னை ஐஐடி பேராசிரியர் ஆர் வினு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் காணொலிக் காட்சி வாயிலாகப் பங்கேற்றனர்.

கழிவிலிருந்து செல்வம், நகர்ப்புறத் தூய்மை இந்தியா இயக்கம் ஆகிய தேசிய அளவிலான இயக்கங்களின் நோக்கங்களுக்கு ஏற்ப 2024-ம் ஆண்டு முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் இத்திட்டத்திற்கு ஆதரவு அளித்தது. பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம், சென்னை ஐஐடி, வாரணாசி ஐஐடி ஆகியவை இணைந்து இத்திட்டத்தைச் செயல்படுத்தின.

பெங்களூரு, மைசூரு, தும்கூரு, சென்னை, தில்லி, வாரணாசி ஆகிய நகரங்களின் செயல்முறை ஆய்வுகளின் அடிப்படையில் பல்வேறு கழிவு மேலாண்மைத் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய வாழ்க்கைச் சுழற்சி மதிப்பீட்டு ஆய்வின் முடிவுகளைத் திட்டக் குழுவினர் சமர்ப்பித்திருந்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2311186&reg=3&lang=1

***

TV/IR/GS/SM


(வெளியீட்டு அடையாள எண்: 2311458) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Telugu