புவி அறிவியல் அமைச்சகம்
தூய்மை மற்றும் திறனை அடைவதில் புவி அறிவியல் அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
17 SEP 2026 8:43AM by PIB Chennai
புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் அதன் நிறுவனங்கள், நிலுவையில் உள்ள விவகாரங்களை தீர்ப்பதற்கான சிறப்புப் பிரச்சாரத்தின் (SCDPM 5.0) ஐந்தாவது பதிப்பின் கீழ் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பதிவு செய்துள்ளன. வருவாய் ஈட்டுதல்,விரைவான குறைதீர்ப்பு ஆகியவற்றில் உறுதியான கவனத்துடன் அமைச்சகம் அதன் நிறுவனங்களுடன் சேர்ந்து ஆளுகை மற்றும் நிர்வாகத்திறனில் விதிவிலக்கான செயல் திறனை காட்டியுள்ளது. SCDPM 5.0-ன் ஒரு பகுதியாக, அமைச்சகம் தமது 10 அலுவலகங்கள், நிறுவனங்களில் டிசம்பர் 2025 முதல் ஆகஸ்ட் 2026 வரை 20 தூய்மைப் பிரச்சாரங்களை நடத்தியது. மேலும் பொருள் மற்றும் கழிவுகளை அகற்றியதில் ரூ.1.57 கோடி வருவாய் கிடைத்துள்ளது. நிர்வாக வெளிப்படைத்தன்மை, பசுமை, பணிச்சுழலை அனைத்து அலுவலகங்களிலும் நிறுவனங்களிலும் செயல்படுத்துவதிலும் புவி அறிவியல் அமைச்சகம் உறுதியாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2311177®=3&lang=1
***
TV/MM/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2311396)
வருகையாளர் எண்ணிக்கை : 12