நிதி அமைச்சகம்
2025-26 ஆம் ஆண்டுக்கான ‘ராஜ்பாஷா கீர்த்தி’ விருதின் கீழ் நிதிச் சேவைகள் துறைக்கு முதல் பரிசு
இடுகை இடப்பட்ட நாள்:
14 SEP 2026 7:28PM by PIB Chennai
2025-26 ஆம் ஆண்டில் அலுவல் மொழித் துறையில் சிறப்பான செயல்பாடுகள் மற்றும் புதுமையான சாதனைகளை மேற்கொண்டதற்காக, 'ராஜ்பாஷா கீர்த்தி' (300-க்கும் குறைவான பணியாளர்களைக் கொண்ட அமைச்சகங்கள்/துறைகள் பிரிவில்) விருது பிரிவின் கீழ் நிதிச் சேவைகள் துறைக்கு முதற்பரிசு வழங்கப்பட்டது.
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில், உள்துறை அமைச்சகத்தின் அலுவல் மொழித் துறை ஏற்பாடு செய்திருந்த 6-வது அகில இந்திய அலுவல் மொழி மாநாடு மற்றும் இந்தி தின கொண்டாட்ட விழாவின் போது இந்த விருது வழங்கப்பட்டது. இந்த மாநாடு 2026 செப்டம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் நவி மும்பையின் வாஷியில் உள்ள சிட்கோ கண்காட்சி மையத்தில் நடைபெறுகிறது.
நிதிச் சேவைகள் துறையின் சார்பில், கூடுதல் செயலாளர் திரு ஹரி ஹர் மிஸ்ரா, மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சரிடமிருந்து இந்த உயரிய விருதைப் பெற்றுக்கொண்டார். நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அலுவலக மொழித் துறையில் பணியாற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2310230®=48&lang=2
**
TV/BR/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2311356)
வருகையாளர் எண்ணிக்கை : 6