பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, நைஜீரிய அமைச்சர் இமான் சுலைமான்-இப்ராஹிம் உடன் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
14 SEP 2026 7:54PM by PIB Chennai
நைஜீரிய நாட்டின் மகளிர் விவகாரம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் இமான் சுலைமான்-இப்ராஹிம், புதுதில்லியில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவியை சந்தித்துப் பேசினார்.
இந்தியாவின் பிரிக்ஸ் 2026 தலைமைத்துவத்தின் கீழ் இக்குழுவை வரவேற்ற அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, வளரும் நாடுகளின் கூட்டு முயற்சிகளுக்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஒரு மதிப்புமிக்க குரலை நைஜீரியாவின் பங்கேற்பு அளிக்கிறது என்று குறிப்பிட்டார். மேலும், பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதல் மற்றும் தொலைநோக்குப் பார்வையிலான தலைமையின் கீழ், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இந்தியா மற்றும் நைஜீரியா கொண்டுள்ள கூட்டு உறுதிப்பாட்டையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
பெண்கள் அமைப்புகளின் வலிமை, பாலின சமத்துவத்தை முக்கிய பிரிவில் இணைத்தல், தொழில்முனைவு மற்றும் நிதிச் சேவைகளைச் சென்றடைதல் ஆகியவற்றை ஊக்குவிப்பதில் பெண்கள் அமைப்புகளின் பங்களிப்பு குறித்த தனது கருத்துகளை திருமதி அன்னபூர்ணா தேவி பகிர்ந்துகொண்டார். பிரதமர் முன்வைத்துள்ள 'பெண்கள் தலைமையிலான வளர்ச்சி' என்ற தொலைநோக்குப் பார்வையால் இந்தியா வழிநடத்தப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். பசுமை எரிசக்தி, சமூகப் பாதுகாப்பு, தேசிய அளவிலான பராமரிப்பு அமைப்புமுறைகள் உள்ளிட்ட பரஸ்பர ஆர்வமுள்ள துறைகள் குறித்தும் அமைச்சர்கள் இருவரும் விவாதித்தனர். மேலும், குழந்தைகளின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் இணையவழிப் பாதுகாப்பு குறித்தும் விவாதங்கள் நடைபெற்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseage.aspx?PRID=2310240®=48&lang=2
-------
TV/BR/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2311351)
வருகையாளர் எண்ணிக்கை : 6