தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார் பூட்டானுக்கு 3 நாள் பயணம் மேற்கொள்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 14 SEP 2026 5:32PM by PIB Chennai

தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. ஞானேஷ் குமார், இன்று (2026 செப்டம்பர் 14) முதல் வரும் 16-ம் தேதி வரை மூன்று நாள் பயணமாக பூட்டானுக்குச் செல்கிறார்.

இந்தப் பயணத்தின்போது, ​​திரு ஞானேஷ் குமார் திம்புவில் பூட்டான் மன்னரைச் சந்திக்கிறார்.  

இந்தப் பயணத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக, நாளை (2026 செப்டம்பர் 15) பாரோவில் உள்ள ஜிக்மே சிங்கே வாங்சுக் சட்டப் பள்ளியில் நடைபெறும் பூட்டானின் தேசிய வாக்காளர் தினக் கொண்டாட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமை விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

2026 செப்டம்பர் 16 அன்று, திரு ஞானேஷ் குமார் திம்புவில் பூட்டான் பிரதமர் திரு தாஷோ செரிங் டோப்கேயை சந்திக்கிறார். மேலும், அவர் பூட்டானின் மூத்த அரசு அதிகாரிகளுடனும் கலந்துரையாடுவார்.

இந்தப் பயணம், இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும் பூட்டான் தேர்தல் ஆணையத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2310147&reg=48&lang=1

***

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2310864) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi