ஜல்சக்தி அமைச்சகம்
நீர் வளங்கள், நதி மேம்பாடு, கங்கை புனரமைப்புத் துறையின் செயல்பாடுகளை மத்திய அமைச்சர் திரு சி ஆர் பாட்டீல் ஆய்வு செய்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
10 SEP 2026 7:36PM by PIB Chennai
நீர்வளத் துறை, நதி மேம்பாடு, கங்கை புனரமைப்புத் துறையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள், முன்முயற்சிகளின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தின் ஆய்வுக் கூட்டம் மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு சி. ஆர். பாட்டீல் தலைமையில் இன்று நடைபெற்றது.
திட்டங்களைச் செயல்படுத்தும் பணிகளை மேலும் திறம்பட மேற்கொள்ளும் வகையில், விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிப்பதற்கான துறை, அதன் பிரிவுகள், அமைப்புகளின் தற்போதைய வழிகாட்டுதல்களைச் சீரமைப்பதன் அவசியத்தை மத்திய அமைச்சர் வலியுறுத்தினார். மேலும், நீரியல் நவீனமயமாக்கல், விரிவான திட்ட அறிக்கைகளைத் தயாரித்தல், வெள்ள முன்னறிவிப்பு, நிலத்தடி நீர் மேலாண்மை போன்ற பணிகளில் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதையும், திட்டங்களைச் சுமூகமாகச் செயல்படுத்துவதையும் உறுதிசெய்ய, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே வலுவான ஒருங்கிணைப்பும், நெருக்கமான ஒத்துழைப்பும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308881®=3&lang=1
***
TV/RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2310834)
வருகையாளர் எண்ணிக்கை : 21