சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
தேசிய பட்டியலின ஆணையத் தலைவர் திரு கிஷோர் மக்வானாவுக்கு டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஜன் சேவா விருது வழங்கப்பட்டது
இடுகை இடப்பட்ட நாள்:
10 SEP 2026 5:56PM by PIB Chennai
தேசிய பட்டியலின ஆணையம் (என்சிஎஸ்சி) தலைவர் திரு கிஷோர் மக்வானாவுக்கு, அவர் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவை, சமூக நீதியை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பு ஆகியவற்றைப் பாராட்டி, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஜன் சேவா விருது 2026 வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற, 16-வது சன்சத் ரத்னா விருதுகள் 2026 விழாவின்போது இந்த விருது வழங்கப்பட்டது. மத்திய நிலக்கரி, சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி தலைமை விருந்தினராகவும், கல்வித் துறை இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார் சிறப்பு விருந்தினராகவும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இவ்விழாவிற்கு, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் திரு ஹன்ஸ்ராஜ் அஹிர் தலைமை வகித்தார். முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் இவ்விழாவில் கலந்துகொண்டார்.
சன்சத் ரத்னா விருதுக் குழுவின் நடுவர் குழு, தேசத்திற்கும் சமூக நீதிக்கும் ஆணையம் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவையை அங்கீகரித்தது. விருதுச் சான்றிதழானது, திரு மக்வானாவின் அர்ப்பணிப்புமிக்க முயற்சிகளை அங்கீகரித்ததோடு, அவரது தலைமையின் கீழ் ஆணையம் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் எடுத்துரைத்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308805®=3&lang=1
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2310814)
வருகையாளர் எண்ணிக்கை : 38