பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்புத் துறையில், உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவை உருவெடுக்கச் செய்யும் வகையில், எம்எஸ்எம்இ, புத்தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைத்து, விரிவுபடுத்த வேண்டும்: மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்
இடுகை இடப்பட்ட நாள்:
15 SEP 2026 1:45PM by PIB Chennai
பாதுகாப்புத் துறையில், உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவை உருவெடுக்கச் செய்வதற்கு, மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின் தொழில்துறை ஒத்துழைப்பு சார்ந்த நடவடிக்கைகள், உற்பத்தியுடன், ஆராய்ச்சி, வடிவமைப்பு, சோதனை, சான்றளிப்பு ஆகிய அம்சங்களுடன் முழு அளவில் அதன் செயல்பாடுகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.
மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின்,தொழில்துறை ஒருங்கிணைப்பு மாநாடு ‘விமர்ஷ்’ செப்டம்பர் 15, 2026 அன்று புது தில்லியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், பாதுகாப்புத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பை அத்துறைக்கான அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், வெளியிட்டு உரையாற்றினார்.
டிஆர்டிஓ அமைப்பின் தொழில்நுட்ப அறிவும், தொழில்துறையின் உற்பத்தித் திறனும், புத்தொழில் நிறுவனங்களின் புதுமைக் கண்டுபிடிப்புகளும், இளைஞர்களின், புதிய இந்தியா குறித்த கனவையும் எத்தகைய இலக்கையும் எட்ட முடியும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகள், பொருளாதார ரீதியில் வலிமையான நாட்டைக் கட்டமைப்பதுடன், தொழில்நுட்ப ரீதியாக தன்னிறைவு பெற்றதாகவும், சமூக மேம்பாட்டில் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், நிலையான சுற்றுச்சூழல், உத்திசார் ரீதியில் பாதுகாப்பான நாடாகவும் உருவெடுக்கச் செய்வதாகும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
“2047-ம் ஆண்டுக்குள், முக்கிய தொழில்நுட்பங்களில் தற்சார்பு நிலையை எட்டுவதுடன், உள்நாட்டு வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும், பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதியில் பன்மடங்கு வளர்ச்சியையும், உலகளவில், விநியோக நடைமுறைகளில் வலுவான நாடு என்ற நிலையையும் அடைய வேண்டும், என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2310384®=3&lang=1
----
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2310620)
வருகையாளர் எண்ணிக்கை : 7