பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
பணியிடத் தூய்மை பிரச்சாரத்திற்கான சிறப்பு இயக்கத்தின், செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்கான பிரத்யேக இணையதளத்தை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் நாளை தொடங்கி வைக்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
15 SEP 2026 1:41PM by PIB Chennai
பணியிடத் தூய்மை பிரச்சாரத்திற்கான சிறப்பு இயக்கத்தின், செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்கான பிரத்யேக இணையதளத்தை (https://scdpm.nic.in/SCDPM26) மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் 16 செப்டம்பர் 2026 அன்று தொடங்கி வைக்கிறார்.
ஆறாவது ஆண்டாக நடைபெறவுள்ள இந்த சிறப்பு இயக்கத்தின் அதிகாரிகள் நிலையிலான ஆலோசனைக் கூட்டம் புதுதில்லியில் நாளை நடைபெறுகிறது.
இதில், மத்திய அரசின் 84 அமைச்சகங்கள் / துறைகளைச் சேர்ந்த தூய்மைப் பராமரிப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரிகள், பொதுக் குறைகளுக்கான ஒருங்கிணைப்பு அதிகாரிகள், மேல்முறையீட்டு அதிகாரிகள், நிர்வாக சீர்திருத்தம், பொதுக் குறைகள் துறை, அஞ்சல் துறை, நிலக்கரித் துறை, பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, சுரங்கத் துறை ஆகியவற்றின் செயலாளர்களும் பங்கேற்கின்றனர்.
நாடு முழுவதிலும் உள்ள அரசு அலுவலகங்களில், பணியிடத் தூய்மை பராமரிப்பு நடைமுறையை பொறுப்புணர்வுடன் மேற்கொள்வது குறித்தும், நிலுவையில் உள்ள பணிகளைக் குறைக்கவும், ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் சிறப்பு இயக்கங்களை ஒருங்கிணைத்து வழிநடத்தும் முதன்மைத் துறையாக, நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுக் குறைகள் துறை, 2021-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
ஆறாவது ஆண்டாக மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிக்கான சிறப்புப் பிரச்சார இயக்கம், அக்டோபர் 2 முதல் 31 வரை 2026-ல் நடைபெறும். முன்னதாக செப்டம்பர் 16 முதல் 30 வரை இதற்கான தயார் நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2310383®=3&lang=1
----
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2310609)
வருகையாளர் எண்ணிக்கை : 8