பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தபால் துறையின் சேவைகள், அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்துகின்றன - மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 14 SEP 2026 4:54PM by PIB Chennai

அஞ்சல் துறையின் அகில இந்திய ஊழியர் அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று, இன்று (14.09.2026) புதுதில்லியில் உள்ள கடமை மாளிகையில், மத்திய, பணியாளர் நலன், ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கைச் சந்தித்தது. இக்குழுவினர், அஞ்சல் சேவைகளின் மாற்றம் குறித்தும், ஊழியர்கள், ஊழியர் அமைப்புகள், ஓய்வூதியதாரர்கள் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்தும் இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்குடன் விவாதித்தனர்.

இந்தக் கலந்துரையாடலின் போது, ​​பிரதிநிதிகள் கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய அஞ்சல் துறையின் சேவைத் தொகுப்பு விரிவடைந்தது குறித்துப் பேசினர். அஞ்சல் துறையின் அகில இந்திய ஊழியர் அமைப்புகளின் பிரதிநிதிகள், இந்திய அஞ்சல் துறையை மேம்படுத்திப் புத்துயிர் அளித்ததற்காக மத்திய அரசைப் பாராட்டினர். இதனை ஒரு நவீனமான, மக்களை மையமாகக் கொண்ட சேவை கட்டமைப்பாக மாற்றியதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர் . இந்த மாற்றங்கள் இந்திய அஞ்சல் துறையின் பங்கை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளதாகவும், நாடு முழுவதும் உள்ள மக்களுக்குப் பலதரப்பட்ட சேவைகளை நெருக்கமாகக் கொண்டு வந்துள்ளதாகவும் அவர்கள் கூறினர். வேகமான விநியோகச் சேவைகள், ஆதார் தொடர்பான வசதிகள், பான், பாஸ்போர்ட் சேவைகள், வங்கிச் சேவைகள், டிஜிட்டல் ஓய்வூதியச் சேவைகள் ஆகியவற்றின் மூலம் அஞ்சல் துறை இப்போது பாரம்பரிய அஞ்சல் விநியோகத்தையும் தாண்டி, அதன் பொதுச் சேவைப் பங்கை வலுப்படுத்துகிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்திய அஞ்சல் துறையின் மாற்றமானது, அத்தியாவசிய சேவைகளை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்கிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில், நாடு தழுவிய ஊரடங்கு இருந்தபோதிலும் தபால் துறை ஆற்றிய முக்கியப் பங்கை டாக்டர் ஜிதேந்திர சிங் நினைவு கூர்ந்தார்.

அஞ்சல் துறையின் பரந்த, நாடு தழுவிய கட்டமைப்பு ஒரு மதிப்புமிக்க பொதுச் சேவைச் சொத்து என்று அமைச்சர் கூறினார். தபால் துறையின் சேவைகள், அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்துகின்றன என்று அவர் தெரிவித்தார்.

அஞ்சல் துறைக் கட்டமைப்பு மூலம் மக்களை மையமாகக் கொண்ட சேவைகளை வழங்குவதை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2310095&reg=48&lang=1

***

TV/PLM/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2310514) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu