பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி, நைஜீரிய துணை அதிபருடன் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 13 SEP 2026 6:13PM by PIB Chennai

புதுதில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி, நைஜீரிய துணை அதபர் திரு காஷிம் ஷெட்டிமா முஸ்தபாவைச் சந்தித்தார். புதுதில்லியில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கான நைஜீரியக் குழுவிற்கு துணை அதிபர் திரு காஷிம் ஷெட்டிமா முஸ்தபா தலைமை வகிக்கிறார். இந்தக் குழுவில் வெளியுறவு, தொழில், வர்த்தகம், முதலீடு, தகவல் தொடர்பு, புத்தாக்கம், டிஜிட்டல் தொழில்நுட்பம், வறுமை ஒழிப்பு, மகளிர் விவகாரங்கள், அறிவியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் அமைச்சர்கள் உட்பட பல அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இரு தலைவர்களும் இந்தியா - நைஜீரியாவின் பன்முக உறவை ஆய்வு செய்து, பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள சீரான முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்தனர். வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, எரிசக்தி, விவசாயம், சுகாதாரம், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் அம்மா இருநாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு அதிகரிப்பது குறித்து இந்த கலந்துரையாடல் கவனம் செலுத்தியது. இந்தியா-நைஜீரியா உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.

பிரதமர் திரு நரேந்திர மோடியும், நைஜீரிய துணை அதிபர் திரு ஷெட்டிமா முஸ்தபாவும், உலக தென்பகுதியின் முன்னுரிமைகள், கவலைகள் உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய, உலகளாவிய விடயங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். பலதரப்பு மன்றங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், அனைவரையும் உள்ளடக்கிய பல்முனை சர்வதேச ஒழுங்கை நோக்கி ஒன்றிணைந்து செயல்படுவதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.

நைஜீரியாவுடனான தனது ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், ஆப்பிரிக்காவுடனான இந்தியாவின் ஈடுபாட்டை வலுப்படுத்துவதற்கும் இந்தியா கொண்டுள்ள தொடர்ச்சியான உறுதிப்பாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். துணை அதிபர் ஷெட்டிமா முஸ்தபா, இந்தியாவின் வளர்ச்சி அனுபவத்தையும், நைஜீரியாவின் வளர்ச்சிக்கு இந்தியா ஆற்றிய பங்களிப்பையும் பாராட்டினார்.

இரு நாடுகளிலும், தெற்கு உலகப் பகுதியிலும் அமைதி, செழிப்பு, வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில், வலுவான, தொலைநோக்குடைய ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான இந்தியா - நைஜீரியாவின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இந்த சந்திப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது.

***

(Release ID: 2309802)

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2309876) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Gujarati , Malayalam