பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி புருண்டி அதிபருடன் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
13 SEP 2026 6:20PM by PIB Chennai
புதுதில்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆப்பிரிக்க யூனியனின் தலைவரும் புருண்டி அதிபருமான திரு எவரிஸ்ட் நடாயிஷிமியே-வுடன் இன்று (13.09.2026) இருதரப்பு சந்திப்பை நடத்தினார்.
2023-ல் இந்தியாவின் தலைமைத்துவத்தின் போது ஆப்பிரிக்க யூனியனை ஜி-20 அமைப்பில் இணைப்பதில் இந்தியாவின் பங்கை நினைவு கூர்ந்த இரு தலைவர்களும், இந்தியா-ஆப்பிரிக்க யூனியன் ஒத்துழைப்பானது, உலகத் தெற்கு நாடுகளுக்குள் ஒத்துழைப்பின் ஒரு முக்கியத் தூண் என்று கூறினர். பரஸ்பரம் வசதியான ஒரு தேதியில் 4-வது இந்தியா-ஆப்பிரிக்கா மன்ற உச்சிமாநாட்டை விரைவில் கூட்டுவது குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
எபோலா நோய்ப் பரவலை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியதற்காக ஆப்பிரிக்க யூனியனின் தலைமையைப் பிரதமர் பாராட்டினார். நோய்ப் பரவலைத் தணிப்பதற்கு உதவியதற்காக, ஆப்பிரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையத்திற்கு இந்தியா வழங்கிய மருத்துவ ஆதரவை ஆப்பிரிக்க யூனியனின் தலைவர் பாராட்டினார்.
அன்பு, ஒற்றுமை, பகிரப்பட்ட வளர்ச்சி ஆகியவற்றால் தொடர்ந்து வளர்ந்து வரும் இந்தியா-புருண்டி உறவுகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். பொருளாதார ஒத்துழைப்பு, வளர்ச்சி, வேளாண் நவீனமயமாக்கல், சுகாதாரம், திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர்.
***
(Release ID: 2309806)
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2309872)
வருகையாளர் எண்ணிக்கை : 6