ரெயில்வே அமைச்சகம்
ஆகஸ்ட் 2026-ல் ரயில்வேயின் பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்துத் திறன் அதிகரிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
13 SEP 2026 12:06PM by PIB Chennai
ஆகஸ்ட் 2026-ல், நாடு முழுவதும் ரயில் சேவைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. ரயில்வே, பயணிகள் போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து ஆகிய இரண்டிலும் வளர்ச்சியைப் பதிவு செய்தது. இந்த மாதத்தில், 14 அம்ரித் பாரத் சேவைகள் முறைப்படுத்தப்பட்டன. இதன் மூலம் பல முக்கிய வழித்தடங்களில் பயணிகளுக்கு மலிவான, வசதியான பயண வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அதே நேரத்தில், தொழிற்சாலைகளுக்கான இறுதிநிலை சரக்கு இணைப்பை மேம்படுத்துவதற்காக 5 புதிய விரைவு சக்தி சரக்கு முனையங்கள் செயல்பாட்டுக்கு வந்தன.
பொருளாதாரத்தின் முக்கியத் துறைகளிலிருந்து தொடரும் தேவையைப் பிரதிபலிக்கும் வகையில், ரயில்வே சரக்கு போக்குவரத்தில் 5.4 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. பண்டிகைக் காலத்தில் ஏற்பட்ட தேவை அதிகரிப்பைப் பூர்த்தி செய்வதற்காகக் கூடுதல் சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்பட்டதால், பயணிகள் போக்குவரத்தும் அதிகரித்தது.
சரக்குப் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இந்த அதிகரிப்பு, நிலக்கரி, இரும்புத் தாது, எஃகு, உரங்கள் மற்றும் பிற பொருட்கள் போன்ற முக்கியத் துறைகளின் அதிகரித்து வரும் தேவையைப் பிரதிபலிக்கிறது.
ஆகஸ்ட் 2025 உடன் ஒப்பிடுகையில், ஆகஸ்ட் 2026-ல் சரக்கு வருவாய் 6.27 சதவீதம் அதிகரித்துள்ளது. இது ரயில்வேயின் சரக்கு வணிகம் தொடர்ந்து வலுப்பெற்று வருவதைக் குறிக்கிறது.
ஆகஸ்ட் 2026-ல் பயணிகள் போக்குவரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க விரிவாக்கம் ஏற்பட்டது. அந்த மாதத்தில் 14 அம்ரித் பாரத் சேவைகள் சிறப்பு ரயில்களில் இருந்து வழக்கமான ரயில்களாக முறைப்படுத்தப்பட்டதன் மூலம், மொத்த அம்ரித் பாரத் சேவைகளின் எண்ணிக்கை 86-ஆக உயர்ந்தது.
இந்தச் சேவைகள் உத்தரப் பிரதேசம், பீகார், குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களை இணைக்கின்றன.
பிராந்திய இணைப்பிற்கான ஒரு முக்கிய உந்து சக்தியாக விளங்கும் ரயில்வே கட்டமைப்பை வலுப்படுத்துவதில் ரயில்வே தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2309663®=48&lang=1
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2309762)
வருகையாளர் எண்ணிக்கை : 5