நிலக்கரி அமைச்சகம்
2014 முதல் எஸ்இசிஎல் நிலக்கரி நிறுவனத்தின் வளர்ச்சி
இடுகை இடப்பட்ட நாள்:
12 SEP 2026 3:48PM by PIB Chennai
நாட்டின் மின் உற்பத்தியில் சுமார் 73% பங்களிக்கும் நிலக்கரி முக்கிய ஆதாரமாகத் திகழ்கிறது. 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 1 பில்லியன் டன் என்ற மைல்கல்லைக் கடந்து, 1.04 பில்லியன் டன்னை எட்டியுள்ளது. சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் உள்ள நிலக்கரிச் சுரங்கப் பகுதிகளில் செயல்பட்டு வரும், கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மினி ரத்னா துணை நிறுவனமான 'சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்' (எஸ்இசிஎல்), இந்தத் தேசிய சாதனைக்கு வித்திட்ட முக்கிய நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட 1985-86-ல் 34.2 மில்லியன் டன்னாக இருந்த நிலக்கரி உற்பத்தி, 2025-26 நிதியாண்டில் 176.28 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. 2025-26 நிதியாண்டில், கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மொத்த உற்பத்தியில் சுமார் 23 சதவீதமும், இந்தியாவின் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தியில் சுமார் 17 சதவீதமும் இந்நிறுவனம் பங்களித்துள்ளது.
2013-14-ல் 124.26 மில்லியன் டன்னாக இருந்த நிலக்கரி உற்பத்தி, 2025-26-ல் 176.28 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. அதே காலகட்டத்தில், 13 மாநிலங்களில் நிலக்கரி விநியோகம் 122.03 மில்லியன் டன்னிலிருந்து 178.63 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது; இது 46%-க்கும் அதிகமான வளர்ச்சியாகும்.
சுமார் ரூ. 13,685 கோடி முதலீட்டிலும், ஏறக்குறைய 342.6 கிலோமீட்டர் நீளமுள்ள ரயில் பாதைகளுடனும் கூடிய சத்தீஸ்கர் கிழக்கு ரயில்வே, சத்தீஸ்கர் கிழக்கு-மேற்கு ரயில்வே வழித்தடங்களை, எஸ்இசிஎல் நிறுவனம் உருவாக்கி வருகிறது. இந்த ரயில்வே கட்டமைப்பு, மாண்ட்-ராய்கர், கோர்பா நிலக்கரிச் சுரங்கப் பகுதிகளின் மிகத் தொலைதூர இடங்களை நாட்டின் ரயில்வே அமைப்புடன் இணைப்பதன் மூலம், எதிர்காலத்தில் சரக்குகள் மற்றும் மக்களின் போக்குவரத்தை திறம்பட மேற்கொள்ள வழிவகுக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2309463®=3&lang=1
****
TV/RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2309703)
வருகையாளர் எண்ணிக்கை : 5