ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மிசோரம் ரயில்வே இணைப்புப் பெற்று ஓராண்டு நிறைவு

இடுகை இடப்பட்ட நாள்: 13 SEP 2026 11:27AM by PIB Chennai

2025-ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி, பிரதமர் திரு நரேந்திர மோடியால் 51.38 கிலோ மீட்டர் நீளமுள்ள பைராபி-சைராங் ரயில் பாதை, சைராங் ரயில் நிலையம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டதன் மூலம், மிசோரம் மாநிலத்தின் வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது. வெறும் ஓராண்டுக்குள், இந்த ரயில் பாதை, தொலைதூர மலை மாநிலமான மிசோரம் மாநிலத்தில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இது, மேம்பட்ட போக்குவரத்து, சந்தைகளுக்கான பரந்த அணுகல், மேம்பட்ட சுற்றுலா, புதிய வாய்ப்புகளுக்கான ஒரு நுழைவாயிலாக உருமாறியுள்ளது.

பல தலைமுறைகளாக, மிசோரம் மாநிலத்தின் கடினமான நிலப்பரப்பின் காரணமாக, நீண்ட தூரப் பயணங்கள் சாலைகளையே பெரிதும் சார்ந்திருந்தன. இதனால், பயணம் அதிக நேரம் எடுப்பதாகவும், அசௌகரியமானதாகவும் இருந்தது. பைராபி-சைராங் புதிய ரயில் பாதை கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த பிறகு, இந்த நிலைமை மாறியது.

பைராபி சாய்ராங் ரயில் பாதை, மிசோரம் மாநிலத்தின் செங்குத்தான மலைகள், ஆழமான பள்ளத்தாக்குகள், மலை இடுக்குகளைக் கடந்து செல்லும் ஒரு பொறியியல் அதிசயமாகும். இந்தத் திட்டத்தில் 55 பெரிய பாலங்கள், 88 சிறிய பாலங்கள், 10 சாலை மேம்பாலங்கள்/சாலை கீழ்ப்பாலங்கள் உட்பட 153 பாலங்கள் உள்ளன. ஆறு பாலங்கள் 70 மீட்டருக்கும் அதிகமான உயரத்தைக் கொண்டுள்ளன. இவற்றில் மிக உயரமான பாலம் 114 மீட்டர் வரை உயர்ந்துள்ளது. இது தில்லியின் குதுப் மினாரை விட 42 மீட்டர் உயரமானதாகும். இந்த ரயில் பாதை, கிட்டத்தட்ட 16 கிலோமீட்டர் நீளத்திற்குப் பரவியுள்ள 45 சுரங்கப்பாதைகள் வழியாகவும் செல்கிறது. இந்த ரயில் வழித்தடம், பைராபியிலிருந்து தேசிய ரயில் கட்டமைப்பை, புதிதாக உருவாக்கப்பட்ட ஹோர்டோகி, கான்புய், முவால்காங், சாய்ராங் ரயில் நிலையம் ஆகிய நான்கு நிலையங்களுடன் இணைக்கிறது. இதன் மூலம், மிசோரம் மாநிலத்தின் தலைநகரான ஐஸ்வாலின் நுழைவாயில் வரை ரயில் இணைப்பு முழுமையடைகிறது.

இவ்வாறு, 2025 செப்டம்பர் 13 அன்று பைராபி சாய்ராங் ரயில் பாதை திறக்கப்பட்டதன் மூலம், மிசோரம் மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது.

கடினமான மலைகளின் ஊடாக அமைக்கப்பட்ட ஒரு ரயில் பாதை, தூரத்தைக் குறைத்து, மிசோரம் மாநிலத்திற்கு ஒரு புதிய போக்குவரத்து அடையாளத்தை வழங்கியுள்ளது. அது போக்குவரத்தை கண்ணியத்துடனும், உள்கட்டமைப்பை தொழில்முனைவுடனும், இணைப்பை வாய்ப்புடனும் இணைத்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2309650&reg=48&lang=1

***

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2309688) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Gujarati , Kannada , Urdu