பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஈரான் அதிபரின் மகளை மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, பிரிக்ஸ் பஜாரருக்கு வரவேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 12 SEP 2026 7:34PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள தேசிய கைவினைப் பொருட்கள் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற 'பிரிக்ஸ் பஜார்' நிகழ்ச்சிக்கு, ஈரான் அதிபர் மேதகு திரு மசூத் பெசெஷ்கியானின் மகள் திருமிகு ஜஹ்ரா பெசெஷ்கியானை, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி வரவேற்றார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தள பதிவு ஒன்றில், ஈரான் அதிபரின் மகளுக்கு அரங்குகளைச்  சுற்றிக் காட்டவும், பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு மற்றும் நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் காட்சிப்படுத்தியிருந்த வளமான பாரம்பரியங்கள், கலை, கைவினைப்பொருட்கள், கலாச்சார மரபுகளைப் பகிர்ந்துகொள்ளவும் தனக்கு வாய்ப்பு கிடைத்ததாக அமைச்சர் கூறினார்.

இந்த பஜார், பிரிக்ஸ் நாடுகளை மேலும் நெருக்கமாக ஒன்றிணைக்கும் கலை, கைவினைத்திறன், கலாச்சாரத் தொடர்புகளின் ஒரு அற்புதமான கொண்டாட்டமாக இருந்தது என்றும் திருமதி அன்னபூர்ணா தேவி குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2309531&reg=3&lang=1

****

TV/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2309676) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Malayalam