விவசாயத்துறை அமைச்சகம்
ஓபியு-ஐவிஎஃப் மூலம் பிறந்த பத்ரி இன கன்று: மரபணு மேம்பாட்டிற்கான ஒரு முக்கிய மைல்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
12 SEP 2026 11:45AM by PIB Chennai
உள்நாட்டு கால்நடை இனங்களைப் பாதுகாத்தல், பெருக்குதல், மரபணு மேம்பாடு ஆகியவற்றுக்கான ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக, உத்தராகண்ட் மாநிலத்தில், சாஹிவால் இனத்தைச் சேர்ந்த ஒரு பசுவின் கருப்பையில் பத்ரி இனக் கருவைச் செலுத்தியதைத் தொடர்ந்து, சோதனைக்குழாய் கருத்தரித்தல் (ஓபியு - ஐவிஎஃப் - OPU-IVF) தொழில்நுட்பத்தின் மூலம் ஆரோக்கியமான பத்ரி இனப் பெண் கன்று ஒன்று வெற்றிகரமாகப் பிறந்துள்ளது. இந்தக் கன்று 2026 செப்டம்பர் 11 அன்று பிறந்தது. பத்ரி இனக் கால்நடைகள் உத்தராகண்டின் ஒரு முக்கியமான உள்நாட்டு கால்நடை மரபணு வளமாகும். அவை உத்தராகண்டின் மாநில விலங்காகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சாதனை, கர்னாலில் உள்ள தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம், உத்தராகண்டின், பந்த்நகரில் உள்ள ஜிபி பந்த் வேளாண் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால், ஹல்தியில் உள்ள உத்தராகண்ட் உயிரித்தொழில்நுட்ப மன்றத்தின் நிதி உதவியுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதிப்புமிக்க பத்ரி மரபணு வளங்களைப் பாதுகாத்தல், விரைவாகப் பெருக்குதல், மரபணு ரீதியாக மேம்படுத்துதல் ஆகியவற்றில் மேம்பட்ட இனப்பெருக்க உயிரித்தொழில்நுட்பத்தின் ஆற்றலை இந்தச் சாதனை நிரூபிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2309386®=3&lang=1
(Release ID : 2309386)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2309562)
வருகையாளர் எண்ணிக்கை : 15