தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழிலாளர் சக்தியே தேசத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை: மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா

இடுகை இடப்பட்ட நாள்: 11 SEP 2026 7:21PM by PIB Chennai

மத்திய அரசின் தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு அமைச்சகம், மகாராஷ்டிர அரசுடன் இணைந்து ஏற்பாடு செய்த, கட்டட, இதர கட்டுமானத் தொழிலாளர்களுக்கான தேசிய மாநாடு, மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தலைமையில் இன்று (11.09.2026) மும்பையில் தொடங்கியது.

 

இந்த மாநாட்டில், மத்திய தொழிலாளர் நலத்துறை இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தொழிலாளர் நல அமைச்சர்கள், மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், மாநில/யூனியன் பிரதேச தொழிலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

மாநாட்டில் உரையாற்றிய திரு மன்சுக் மாண்டவியா, தொழிலாளர் சக்தி ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்றும், அது தேசத்தைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் கூறினார். எனவே, தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பும் நலனும் தேசிய வளர்ச்சிக்கு அடிப்படையானது என்று அவர் கூறினார். தொழிலாளர்களுக்கு விரிவான சமூகப் பாதுகாப்பு வழங்குவதற்காக, மாநிலங்களுக்கிடையே சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். மாறிவரும் காலங்களுக்கு ஏற்ப தொழிலாளர் சூழலமைப்பு தொடர்ந்து பரிணமிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

 

திறன் வாய்ந்த தொழிலாளர்களுக்கான உலகளாவிய தேவை அதிகரித்து வருவதையும், இந்த வளர்ந்து வரும் வாய்ப்புகளை எதிர்கொள்ள இந்தியாவின் தொழிலாளர் சக்தியைத் தயார்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

 

தொழிலாளர் நலத்துறை இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தமது நிறைவுரையில், அனைத்துத் தொழிலாளர்களின் பதிவை உறுதி செய்வதற்கும், நிதிகளைத் திறம்படப் பயன்படுத்துவதற்கும் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை என்று வலியுறுத்தினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2309283&reg=3&lang=1

(Release ID : 2309283)

***

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2309448) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati