சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மைப் பணியாளர்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டை உயர்த்தும் நடவடிக்கையில் மத்திய அரசு

இடுகை இடப்பட்ட நாள்: 11 SEP 2026 5:44PM by PIB Chennai

சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும், நிறுவனமான தேசிய தூய்மைப் பணியாளர்கள் நிதி, மேம்பாட்டுக் கழகம் (என்எஸ்கேஎஃப்டிசி) , நாடு முழுவதும் உள்ள தூய்மைப் பணியாளர்களிடையே நிலையான வாழ்வாதாரங்களையும் சமூக-பொருளாதார அதிகாரமளித்தலையும் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.

இது தனது கடன் அடிப்படையிலான திட்டங்களின் கீழ், ஒரு தனிப்பட்ட பயனாளிக்கு ₹30 லட்சம் வரையிலும், குழுவிற்கு ₹75 லட்சம் வரையிலும் கடன்கள் வழங்குகிறது.

பெண் பயனாளிகளுக்கு வட்டி விகிதத்தில் 1% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இந்த அமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்து 10 செப்டம்பர் 2026 வரை, 6,10,902 நபர்களுக்கு ₹ 3,365.93 கோடி மதிப்பிலான சலுகைக் கடன்களை அனுமதித்து வழங்கியுள்ளது.

24 ஜனவரி 1997 அன்று ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமாக நிறுவப்பட்ட என்எஸ்கேஎஃப்டிசி, தூய்மைப் பணியாளர்களின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2309218&reg=3&lang=1

(Release ID : 2309218)

***

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2309426) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu