பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி வியட்நாம் பிரதமருடன் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
12 SEP 2026 12:54PM by PIB Chennai
புதுதில்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (12.09.2026) வியட்நாம் பிரதமர் திரு லே மின் ஹங்கைச் சந்தித்தார்.
பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் வியட்நாம் ஒரு கூட்டாளர் நாடாகப் பங்கேற்பதை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார். வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், வியட்நாம் சோசலிஸ்ட் குடியரசின் அதிபருமான திரு. டோ லாம், மே 2026-ல் இந்தியாவுக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின்போது, மேம்படுத்தப்பட்ட விரிவான உத்திசார் ஒத்துழைப்பின் மூலம் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். மேலும், பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பிராந்திய, உலகளாவிய பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதுடன், இரு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.
இந்தியாவும் வியட்நாமும், பகிரப்பட்ட நாகரிகப் பாரம்பரியம், பரஸ்பர நம்பிக்கை, புரிதல் ஆகியவற்றில் வேரூன்றிய, காலத்தால் மாறாத நட்புறவைப் பகிர்ந்து கொள்கின்றன. வியட்நாம், இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் ஒரு முக்கியத் தூணாகவும், தென்கிழக்கு ஆசியப் பகுதியுடனான இந்தியாவின் பரந்த ஈடுபாட்டில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும் நாடாகவும் விளங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2309407®=48&lang=1
(Release ID: 2309407)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2309423)
வருகையாளர் எண்ணிக்கை : 9