புவி அறிவியல் அமைச்சகம்
இந்தியாவின் கடற்கரைப் பகுதியைச் சூழலியல், பாதுகாப்பு, பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் மனிதவள மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக கருத வேண்டும்: டாக்டர் ஜிதேந்திர சிங்
இடுகை இடப்பட்ட நாள்:
11 SEP 2026 3:49PM by PIB Chennai
இந்திய கடற்பரப்பு சூழலியல், பாதுகாப்பு, பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் மனிதவள மேம்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக கருதப்பட வேண்டும் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்து உள்ளார்.
கடலோர சூழலியல், பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை மாநாட்டில் காணொலி வாயிலாக மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவில் 12,000 கி.மீ பரப்பளவு கொண்ட கடற்கரை கடல்சார் வளங்களுக்கும், நீலப் பொருளாதாரத்திற்கும் குறிப்பிடத்தக்க வகையிலான சாத்தியக்கூறுகளை வழங்குவதாக தெரிவித்தார்.
நாட்டின் நீண்ட கடற்கரை மற்றும் கடல்சார் சூழல் குறிப்பிட்ட வாய்ப்புகளை வழங்குவது மட்டுமின்றி, அறிவியல், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டை ஒருங்கிணைக்கும் அணுகுமுறையையும் கோருவதாக தெரிவித்தார்.
12,000 கி.மீ நீளம் கொண்ட உலகின் மிகப்பெரிய கடற்பரப்பை கொண்டுள்ள இந்தியா, நாட்டின் எதிர்கால வளர்ச்சியில் பெருங்கடல் மற்றும் கடலோர பகுதிகளின் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்துவதாக தெரிவித்தார்.
ஆழ்கடல் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பேசிய அமைச்சர் ஜிதேந்திர சிங், ஆழ்கடலில் அதிகளவில் ஆராயப்படாத இடங்களில் ஆய்வு செய்யும் பணியை இந்தியா துவக்கி இருப்பதாகவும், அதற்காக உள்நாட்டு திறன்களை மேம்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
உள்நாட்டு கடல்சார் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், இந்தியாவின் அதிநவீன கடல்சார் ஆய்வுக் கப்பலான சாகர் மந்தன் கப்பலை தொடங்கி வைத்தது குறித்து பேசிய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், சாகர் மந்தன் கப்பல் ஆழ்கடல் ஆராய்ச்சியில் இந்தியா தன்னிறைவு நிலையை எட்ட உதவும் எனவும் கூறினார்.
மேலும், மாநாடு கடல்சார் ஆராய்சியில் நிபுணத்துவம் பெற உதவும் எனவும், புவி அறிவியல், கல்வி, பாதுகாப்பு, கடல்சார் நிறுவனங்கள், தொழில்துறை ஆகியோருக்கு கடல்சார் சவால்கள் குறித்த புரிதலை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2309142®=3&lang=1
****
TV/AC/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2309339)
வருகையாளர் எண்ணிக்கை : 5