நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தாரா நிலக்கரி சுரங்க ஏலம் குறித்த ஊடகச் செய்திகள் தவறானவை: மத்திய நிலக்கரி அமைச்சகம் விளக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 11 SEP 2026 12:40PM by PIB Chennai

திருத்தப்பட்ட தாரா நிலக்கரி சுரங்க ஏலத்தில் முறைகேடுகள் நடந்ததாக ஊடங்கங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக மத்திய நிலக்கரி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு ஹஸ்தியோ அரந்த் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்க தொகுதி, வணிக நிலக்கரி சுரங்க ஏலத்தில் விடப்பட்டிருந்த நிலையில், லெம்ரு யானைகள் வழித்தடத்தில் அப்பகுதி இருப்பதாக சத்தீஸ்கர் அரசு கடிதம் அளித்த்தை அடுத்து அந்த முடிவு கைவிடப்பட்டது. 

இந்நிலையில், கடந்த 2025 டிசம்பர் 11 அன்று சத்தீஸ்கர் மாநில அரசு எழுதிய கடிதத்தில், தாரா நிலக்கரி சுரங்க பகுதி லெம்ரு யானைகள் வழித்தடத்திற்கு வெளியே இருப்பதாகவும், எதிர்வரும் நிலக்கரி ஏலத்தில் அப்பகுதியை ஏலத்தில் விடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, லெம்ரு யானைகள் வழித்தட மண்டலத்திலிருந்த  தாரா நிலக்கரி சுரங்க தொகுதி நீக்கப்பட்டு 15-வது சுற்று வணிக நிலக்கரி சுரங்க ஏலத்தில் விடப்பட்டது.

மேலும், ஏலம் விடப்படும்  இடத்தின் மூலம் மாநில அரசுக்கு ரூ.1,200 கோடி ஆண்டு வருவாயும், 8,000 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2309064&reg=3&lang=1

***

SS/AC/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2309241) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati , Telugu