எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அமெரிக்காவில் ஹூஸ்டனில் நடைபெறும் ஜி20 எரிசக்தித்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் பங்கேற்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 11 SEP 2026 8:41AM by PIB Chennai

அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் 2026 செப்டம்பர் 14 முதல் 16 வரை நடைபெறும் ஜி20 எரிசக்தித்துறை அமைச்சர்கள் கூட்டத்தில், மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் பங்கேற்கிறார்.  அமெரிக்கா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு உலக அளவிலாள எரிசக்தி பாதுகாப்பு குறைந்த செலவிலான உற்பத்தி, உள்கட்டமைப்பு மேம்பாடு, வலுவான எரிசக்தி விநியோக அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

எரிசக்தி பாதுகாப்பு குறைந்த செலவிலான மின்சார விநியோகம், உற்பத்திக்கான அனுமதி மற்றும் செயல்திறன்மிக்க கட்டுப்பாடுகள், அரியவகை கனிமங்கள், வலுவான விநியோக அமைப்புகள் ஆகிய மூன்று முக்கிய அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

விரைவாக அதிகரித்து வரும் எரிசக்தி தேவைகளைக் கருத்தில்கொண்டு அவற்றை பூர்த்தி செய்யும் வகையில் வலுவான, எதிர்காலத்திற்கு ஏற்ற எரிசக்தி பாதுகாப்பிற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து இந்தியாவின் அணுகுமுறையைத் திரு மனோகர் லால் விரிவாக எடுத்துரைப்பார்.

எரிசக்தி உற்பத்திக்கான அனுமதி மற்றும் செயலாக்க கட்டுப்பாட்டு விதிகளை மேம்படுத்துவதில் இந்தியாவின் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதுடன் அரியவகை கனிமங்களின் பன்முகத்தன்மை, சுழற்சி அடிப்படையிலான பயன்பாடு, முழுமையான மதிப்பு நடைமுறைகளை வலுப்படுத்துவதில் இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் திரு மனோகர் லால் விரிவாக எடுத்துரைக்க உள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308993&reg=3&lang=1

***

SS/SV/SM/RJ 


(வெளியீட்டு அடையாள எண்: 2309113) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri , Gujarati , Telugu , Kannada , Malayalam