குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் செப்டம்பர் 11, 12-ம் தேதிகளில் தாத்ரா - நகர் ஹவேலி மற்றும் டாமன் - டையூவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
10 SEP 2026 6:15PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், 2026 செப்டம்பர் 11, 12-ம் தேதிகளில், தாத்ரா - நகர் ஹவேலி மற்றும் டாமன் - டையூ யூனியன் பிரதேசத்துக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
அவர் சில்வாசாவில் உள்ள டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் அரசு கல்லூரியில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.
மேலும், சுவாமி விவேகானந்த வித்யா மந்திர், நமோ மருத்துவக் கல்வி - ஆராய்ச்சி நிறுவனம், டாமனில் சமீபத்தில் திறக்கப்பட்ட நமோ மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் அவர் பார்வையிடுகிறார்.
டாமன் இரவுச் சந்தை, ராம்சேது கடற்கரை, நமோபத் கடற்கரை உள்ளிட்ட முக்கியமான சுற்றுலா, கடற்கரை மேம்பாட்டுத் தலங்களையும் பார்வையிடவுள்ளார்.
***
(Release ID: 2308828)
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2309103)
வருகையாளர் எண்ணிக்கை : 5