குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

உங்கள் கனவுகளுக்கான எல்லைகளை வகுக்க எவரையும் அனுமதிக்காதீர்கள்: டோன்யி-போலோ மிஷன் பள்ளியில் மாணவர்களிடம் கலந்துரையாடிய குடியரசு துணைத் தலைவர்

இடுகை இடப்பட்ட நாள்: 09 SEP 2026 6:02PM by PIB Chennai

அருணாச்சலப் பிரதேச மாநிலம் இட்டாநகரின் சிம்புவில் அமைந்துள்ள, செவித்திறன், பார்வைத்திறன், மனநலன் குன்றியோர்களுக்கான டோன்யி-போலோ மிஷன் பள்ளியைக் குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டார். அங்குள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்பள்ளியின் பல்வேறு செயல்பாட்டுப் பகுதிகளைப் பார்வையிட்ட அவர், மாணவர்களிடையே உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசு துணைத் தலைவர், இந்தப் பயணம் தமக்கு ஆழ்ந்த உணர்வுகளையும், தேசபக்தியையும் ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக, மாணவர்கள் 'வந்தே மாதரம்' பாடலைப் பாடியதைக் கேட்டபோது, தே உணர்வு மேலோங்கியதாக அவர்  கூறினார். அப்பாடல் மிகுந்த சிரத்தையுடன் பாடப்பட்டதால், மாணவர்களின் மனதிலிருந்து வெளிப்பட்ட தேசபக்தியைத் தன்னால் உணர முடிந்ததாக அவர் தெரிவித்தார்.

அருணாச்சலப் பிரதேச மாநில அரசு, டோனி-போலோ மிஷன், நிர்வாகம், ஆசிரியர்கள், மறுவாழ்வு நிபுணர்கள் மற்றும் பணியாளர்களுக்குப் பாராட்டு தெரிவித்த அவர், அம்மாநில முதலமைச்சர் திரு பெமா காண்டுவின் தலைமையிலான மாநில அரசின் சாதனைகள், சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கி உள்ளதாகக் கூறினார்.

மாணவர்கள் தங்களது கனவுகளுக்கான எல்லைகளை வகுக்க எவரையும்  அனுமதிக்க வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார். ஒவ்வொரு தனிமனிதனும் தனித்துவத் திறன் கொண்டவர்கள் என்று கூறிய அவர், மாணவர்கள் பெரிய அளவில் கனவு காணவும், தங்கள் திறமை மீதான நம்பிக்கையை வாரத்துக்கு கொள்ளவும், கடினமாக உழைக்கவும் வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

திரு ஸ்ரீகாந்த் பொல்லாவின் உத்வேகம் அளிக்கும் பயணத்தைக் குறிப்பிட்ட திரு சி பி ராதாகிருஷ்ணன், சவால்களை முறியடித்து வென்றி பெற்றவர்களிடம் இருந்து உத்வேகம் பெற வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308389&reg=3&lang=1   

***

TV/SV/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2308836) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Malayalam