புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் தூய எரிசக்தி மாற்றத்தில் சிறிய நீர்மின்சக்தி திட்டங்கள் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளது : மத்திய அமைச்சர் திரு ஸ்ரீபத் யசோ நாயக்

இடுகை இடப்பட்ட நாள்: 10 SEP 2026 3:08PM by PIB Chennai

இந்தியாவின் தூய எரிசக்தி மாற்றத்தில் சிறிய நீர்மின்சக்தி திட்டங்கள் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளதாக மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணையமைச்சர்  திரு ஸ்ரீபத் யசோ நாயக் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற பாரத் புதுப்பிக்கத்தக்க  எரிசக்தி உச்சிமாநாடு மற்றும் கண்காட்சியில் பிரத்யேக சிறிய நீர்மின்சக்தி அமர்வுக்கான அறிமுக நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். சிறிய நீர்மின்சக்தி,  கடைக்கோடிப் பகுதிகளில் எரிசக்தி பாதுகாப்பு, பரவலாக்கப்பட்ட மின் உற்பத்தி, வேலைவாய்ப்பு, சமூக பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்கு பங்களிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையின் தலைமையின் கீழ், இந்தியாவின் தூய எரிசக்தி பயணம் குறிப்பிடத்தக்க மாற்றத்தை எதிர்கொண்டுள்ளதாகவும், இது உலகளாவிய எரிசக்தி மாற்றத்தில் நாட்டை முன்னணியில் திகழச் செய்துள்ளதாகவும் திரு நாயக் தெரிவித்தார். எரிசக்தி பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம், வேலைவாய்ப்பு உருவாக்கம், ஆகியவற்றின் சக்தியாக எரிசக்தி உருவெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308669&reg=3&lang=1

***

TV/IR/PS/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2308825) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Bengali-TR , Kannada