மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவு, பன்மொழி செயற்கை நுண்ணறிவு மேம்பாடு குறித்த பயிலரங்கை நடத்தியது
இடுகை இடப்பட்ட நாள்:
10 SEP 2026 12:51PM by PIB Chennai
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டிஜிட்டல் இந்தியா நிறுவனத்தின் டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவு மகாராஷ்ட்ரா அரசின் மொழித்துறையுடன் இணைந்து ஒரு பயிலரங்கை நடத்தியது. மகாராஷ்ட்ரா தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பயிலரங்கில் டிஜிட்டல் சேவைகள், அரசுத்தகவல்கள், குடிமக்களுக்கான செயலிகளை அவர்கள் விரும்பும் மொழிகளில் பயன்படுத்துவதில் பன்மொழி மற்றும் குரல்வழி செயற்கை நுண்ணறிவின் சாத்தியக்கூறுகளை ஆராய்வது ஆகியவை நோக்கமாக இருந்தது.
இந்தக் கலந்துரையாடல் குறிப்பாக மராத்தி உள்ளிட்ட இதர இந்திய மொழிகளில் மொழி தொழில்நுட்பங்களை குடிமக்களுக்கு உகந்த வகையில் ஏற்படுத்துவதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய, அணுகக்கூடிய, குடிமக்களை மையாமாகக் கொண்ட டிஜிட்டல் நிர்வாகத்தை செயல்படுத்துவதில் மொழி செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308618®=3&lang=1
***
TV/IR/PS/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2308680)
வருகையாளர் எண்ணிக்கை : 7