திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பொருளாதார வளர்ச்சி, சீர்திருத்த நடவடிக்கைகளுக்கான உந்து சக்திகளாக மாவட்டங்கள் திகழ்கின்றன: மத்திய அமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி

இடுகை இடப்பட்ட நாள்: 09 SEP 2026 6:09PM by PIB Chennai

பெண்களுக்கான நீடித்த வாழ்வாதாரங்களை உருவாக்குதல் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு திறன் மேம்பாடு குறித்த இணையவழி கருத்தரங்கிற்கு, மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த முயற்சி குறித்துப் பேசிய மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி, மாவட்ட நிர்வாகங்கள் செயல்பாடுகள், வளர்ச்சி, சீர்திருத்தம், மாற்றத்திற்கான உந்துசக்திகளாகத் திகழ்கின்றன என்று கூறினார்.

மாவட்ட அளவிலான திட்டமிடல், செயல்பாடுகளின் மூலம், உள்ளூர் தேவைகளின் அடிப்படையிலும், குறிப்பாக, குறு, சிறு, நடுத்தரத் தொழில்  நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ப, திறன் மேம்பாட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை மத்திய அரசு உறுதி செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.

மாவட்ட திறன் மேம்பாட்டுத் திட்டங்களின் ஆதரவுடன், திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள், அதன் முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இது இளைஞர்கள், உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்குப் பயனளிக்கும் வகையில், தேவையை அடிப்படையாகக் கொண்ட, சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முடிவுகளைச் சாத்தியமாக்குவதாக உள்ளது என்று திரு ஜெயந்த் சௌத்ரி தெரிவித்தார்.

உள்ளூரில் உள்ள யதார்த்தமான கள நிலவரங்களின் அடிப்படையில், திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது, இந்தியாவின் திறன் மேம்பாட்டிற்கான இலக்குகளை அடைய முடியும் என்று மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவு அமைச்சகத்தின் செயலாளர் திருமதி தேபஸ்ரீ முகர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்தக் கருத்தரங்கில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் மீரட், பிஜ்னோர், ஆந்திரப் பிரதேச மாநிலத்தின்  என்.டி.ஆர் மாவட்டம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட புதுமையான முன் முயற்சிகள்  முன்னிலைப்படுத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2308394&reg=3&lang=1

(Release ID: 2308394)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2308522) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Tamil