குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

பழங்குடியினச் சமூகங்கள் இந்தியாவின் கடந்த காலத்தின் பாதுகாவலர்களாக இருப்பதுடன், நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பங்கேற்பவர்களாகவும் திகழ்கின்றனர்: குடியரசு துணைத் தலைவர்

இடுகை இடப்பட்ட நாள்: 09 SEP 2026 4:10PM by PIB Chennai

அருணாச்சல பிரதேச மாநிலம் இட்டாநகரில் உள்ள நிஷி சமூகம், பிற பூர்வகுடி குழுக்களின் 'டோனி-போலோ' நம்பிக்கையுடன் தொடர்புடைய புனித வழிபாட்டுத் தலமும், சமூக மையமான நியேடர் நம்லோ பகுதியை குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டார்.

அங்குள்ள பிரார்த்தனை கூடத்தில், அவர் வழிபாடு நடத்தினார். நிஷி சமூகத்தின் பூர்வகுடி நம்பிக்கை, வழிபாட்டு முறைகள், 'யெர்கோ' எனும் பூர்வகுடி குருகுலக் கல்வி முறை, பாரம்பரிய அறிவு, மருத்துவ முறைகளைப் பாதுகாத்தல், தாய்மொழியை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் ஆகியவை குறித்து அவருக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர், அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கு தாம் மேற்கொண்ட முதல் பயணத்தின்போது 'நியேடர் நம்லோ'-வை பார்வையிட்டது தனக்குக் கிடைத்த பாக்கியம் என்று குறிப்பிட்டார்.

 

பாரம்பரியங்கள் நவீன சிந்தனைகளாக உருவெடுக்கும் அதே வேளையில், நவீன சிந்தனைகள் பாரம்பரியச் சின்னங்களை சிதைத்துவிடாமல் பாதுகாக்கும் ஒரு இடத்தில் இருப்பதில் பெருமை கொள்வதாகவும் அவர் கூறினார்.

பழமையான பாரம்பரியங்களும் நவீன லட்சியங்களும் இணைந்து பயணிக்கும் அருணாச்சல பிரதேச மாநிலத்தை, இந்தியாவின் 'வேற்றுமையில் ஒற்றுமை' என்பதன் பெருமைமிக்க அடையாளமாக திரு சி பி ராதாகிருஷ்ணன் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308288&reg=3&lang=1

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2308449) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी