திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

48-வது சர்வதேசத் திறன் போட்டியில் 11 புதிய பிரிவுகளில் இந்தியா முதன்முறையாகப் பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 09 SEP 2026 12:55PM by PIB Chennai

சீனாவின் ஷாங்காய் நகரில் 2026 செப்டம்பர் 22 முதல் 27 வரை நடைபெற உள்ள 48-வது சர்வதேசத் திறன் போட்டியில், இந்தியா 11 புதிய திறன் பிரிவுகளில் முதன்முறையாகக் களம் காண்கிறது. இதில் 64 திறன் பிரிவுகளில் 63 பிரிவுகளில் சுமார் 70 இந்தியப் போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்.  

செயற்கை பல் பொருத்துதல் மருத்துவம், டிஜிட்டல் ஊடக வடிவமைப்பு, நுண்ணறிவுப் பாதுகாப்புத் தொழில்நுட்பம், நிலப்பரப்புத் தோட்டம் அமைத்தல், ஆப்டோ எலக்ட்ரானிக் தொழில்நுட்பம், சில்லறை விற்பனை, ஆளில்லா ட்ரோன் அமைப்புகள், தொழில்துறை இயக்கவியல், மென்பொருள் சோதனை, கனரக வாகனத் தொழில்நுட்பம், விமானப் பராமரிப்பு ஆகிய 11 புதிய பிரிவுகளில் இந்தியா முதன்முறையாகப் போட்டியிடுகிறது.

மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து போட்டியாளர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளித்து வருகிறது. சர்வதேசத் திறன் போட்டிகளில் இந்தியாவின் தரவரிசை 2015-ல் 29-வது இடத்திலிருந்து 2024-ல் 13-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. புதிய துறைகளில் இந்திய இளைஞர்களின் பங்களிப்பு உலக அளவில் நாட்டின் திறனை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308169&reg=3&lang=1

***

TV/PD/RJ   


(வெளியீட்டு அடையாள எண்: 2308338) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Telugu