சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
பின்தங்கிய பகுதி மக்களுக்குச் சிறப்பு மருத்துவச் சேவைகள் சமமாகக் கிடைப்பதை உறுதி செய்வதே இந்தியாவின் முக்கிய இலக்கு: மத்திய அமைச்சர் ஜெ. பி. நட்டா பேச்சு
இடுகை இடப்பட்ட நாள்:
08 SEP 2026 7:01PM by PIB Chennai
கிழக்கு திமோர் நாட்டில் நடைபெற்ற 79-வது உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசியப் பிராந்தியக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ. பி. நட்டா, கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதி மக்களுக்குச் சிறப்பு மருத்துவச் சேவைகள் சமமாகக் கிடைப்பதை உறுதி செய்வதே இந்தியாவின் முக்கிய இலக்கு என்று வலியுறுத்தினார்.
இந்தியாவில் கடந்த 2014ம் ஆண்டு முதல் மருத்துவக் கல்வி மற்றும் உள்கட்டமைப்பு பெருமளவில் மேம்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதன்படி, நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 387-ல் இருந்து 858 ஆக உயர்ந்துள்ளது. மேலும், எம்பிபிஎஸ் இடங்கள் 51,348-ல் இருந்து 1,42,464 ஆகவும், முதுகலை மருத்துவ இடங்கள் 31,185-ல் இருந்து 86,287 ஆகவும் பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன. பின்தங்கிய மாவட்டங்களில் அவசர மருத்துவம் மற்றும் முதியோர் நலம் போன்ற சிறப்புப் பிரிவுகளில் கூடுதலாக 10,000 முதுகலை இடங்கள் உருவாக்கப்படவுள்ளன. இவற்றுடன், நாட்டின் பல பகுதிகளில் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்பட்டு வருவதன் மூலம், ஆண்டுதோறும் சுமார் 15,700 செவிலியர்கள் உருவாக்கப்பட்டு நாட்டின் சுகாதாரத் துறை மேலும் பலப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307968®=3&lang=1
***
TV/VK/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2308155)
வருகையாளர் எண்ணிக்கை : 6