பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியா மற்றும் மொராக்கோ நாடுகளுக்கு இடையிலான முதலாவது கூட்டுப் பாதுகாப்புக் குழுக் கூட்டம்
இடுகை இடப்பட்ட நாள்:
08 SEP 2026 6:25PM by PIB Chennai
இந்தியா மற்றும் மொராக்கோ நாடுகளுக்கு இடையிலான முதலாவது கூட்டுப் பாதுகாப்புச் குழுக் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது. இரு நாடுகளின் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
ராணுவப் பயிற்சி, அமைதிகாப்புப் பணிகள், கூட்டுப் பயிற்சிகள், மருத்துவ ஒத்துழைப்பு, இணைய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி போன்ற துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சக இணைச் செயலாளர் அமிதாப் பிரசாத் மற்றும் மொராக்கோ பிரிகேடியர் ஜெனரல் அப்தெல்லா அத்மானி ஆகியோர் கூட்டத்திற்கு இணைத் தலைமை தாங்கினர்.
செப்டம்பர் 7 முதல் 10 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மொராக்கோ குழுவினர், இந்தியாவின் பாதுகாப்புத் தயாரிப்பு நிறுவனங்களைப் பார்வையிட்டதுடன், கூட்டுத் தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பக் கூட்டாண்மை குறித்தும் ஆராய்ந்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307946®=3&lang=1
***
TV/VK/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2308150)
வருகையாளர் எண்ணிக்கை : 6