நித்தி ஆயோக்
இந்தியாவில் பூஜ்ஜிய உமிழ்வு கொண்ட சரக்குப் போக்குவரத்து முறைகளை விரைவாகச் செயல்படுத்துவதை ஆதரிப்பதற்கான, நிதி ஆயோக்கின் பிஏசிடி திட்டம்
இடுகை இடப்பட்ட நாள்:
07 SEP 2026 6:20PM by PIB Chennai
இந்தியாவில் பூஜ்ஜிய-உமிழ்வு கொண்ட சரக்கு லாரிகளின் பயன்பாட்டை விரைவுபடுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக, நிதி ஆயோக் உறுப்பினர் திரு ராஜீவ் கௌபா, தூய்மையான போக்குவரத்தை ஒருங்கிணைப்பதற்கான தளத்தை (பிஏசிடி) '5-வது இ-ஃபாஸ்ட் இந்தியா உச்சிமாநாடு 2026'-ல் தொடங்கி வைத்தார். சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் செயலாளர் திரு வி. உமாசங்கர், கனரகத் தொழில்கள் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் டாக்டர் ஹனிஃப் குரேஷி, நிதி ஆயோக்கின் மின்சாரப் போக்குவரத்துப் பிரிவுத் திட்ட இயக்குநர் திருமதி அர்ச்சனா மிட்டல், தொழில், நிதி, சரக்குப் போக்குவரத்துத் துறைகளைச் சேர்ந்த சுமார் 250 பங்கேற்பாளர்கள் முன்னிலையில் இந்தத் தளம் தொடங்கி வைக்கப்பட்டது.
உச்சிமாநாட்டில் பேசிய திரு ராஜீவ் கௌபா, மின்சார வாகன உற்பத்தித் திறனை உள்நாட்டில் உருவாக்குவதிலும், அதற்கான கொள்கை வழிமுறைகளை அமைப்பதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், வளர்ச்சியின் அடுத்த கட்டம், கூட்டு முயற்சியின் மூலம் இத்துறையின் ஒட்டுமொத்தச் சூழலமைப்பில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் நமது திறனைச் சார்ந்தே அமையும் என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2307592®=3&lang=1
***
TV/BR/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2307738)
வருகையாளர் எண்ணிக்கை : 13